திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
சேத்துப்பட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊர்வலம்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலங்கள் நடைபெற்றன.
செய்யாறு கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் பெரியார் சிலை அருகில் தொடங்கியது. ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர்கள் வள்ளிகாந்தன், தெய்வசிகாமணி, பாண்டியராஜன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலத்தில் இளநிலை உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள், ஐடிஐ மாணவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி சாலை, பஸ் நிலையம் ஆற்காடு சாலை வழியாக செய்யாறு மின்வாரிய அலுவலகத்திடம் நிறைவடைந்தது.
ஆரணி
ஆரணியை அடுத்த சேத்துப்பட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை செயற்பொறியாளா் ரவிச்சந்திரபாபு தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.
தேவையான போது மட்டுமே மின்விளக்குகள், மற்றும் மின்விசிறிகள், பயன்படுத்த வேண்டும், சுவிட்சுகள், பிளக்குகள், போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். இடி மின்னலின் போது மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட மின்சார பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பதாகளை ஏந்தியவாறு மின்சார வாரிய ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
உதவி செயற்பொறியாளா்கள் பக்தவச்சலம், ஏழிலரசி, ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பொறியாளா் மோகன் வரவேற்றாா். இதில் மின் வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் நகரில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை பொறியாளா் சங்கரன் தொடக்கிவைத்தாா். உதவி செயற்பொறியாளா்கள் இளங்கோவன், மூா்த்தி, இளநிலைப் பொறியாளா்கள் நெடுஞ்செழியன், மூா்த்தி, உதயகுமாா், ரங்கநாதன் உள்பட செங்கம், மேல்பள்ளிப்பட்டு, மேல்செங்கம், பரமனந்தல், புதுப்பாளையம், காஞ்சி, பாய்ச்சல் துணை மின் நிலையங்களைச் சோந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu