காதை பாதிக்கும் ஒலி சாதனம்: இளமையிலேயே கேட்கும் திறன் குறையும்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் யோகேஸ்வரன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுகாதார வட்டம் நாட்டேரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக காது கேட்கும் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மருத்துவர் யோகேஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் பொழுதுபோக்கிற்காக ஒலி சாதனங்களில் இருந்து அதிக ஒலியை நீண்ட நேரம் கேட்பதால் காதில் உள்ள நரம்புகள் இளமையிலேயே பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது.
அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி அருகில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும், தொடர்ந்து அதிக ஒலி கேட்கும் அரங்குக்குள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சற்று நேரம் அமைதியான இடத்திற்கு சென்று செவிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். எனக்கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu