செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது
X

சிறந்த பள்ளிக்கான விருதை வழங்கிய கல்வி அமைச்சர்

தமிழகத்தில் சிறந்த பள்ளியாக செய்யாத அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சிறந்த பள்ளியாக செய்யாத அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ₹10 லட்சம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கி கவுரவித்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி. ஜெயகாந்தனிடம், நினைவு கேடயம், பாராட்டு சான்றுகள் மற்றும் பள்ளி பராமரிப்பு பணிக்காக ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து பரிசு வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு மேற்கண்ட பரிசுகளை பெற்றுக் கொண்டார்.

சிறந்த பள்ளியாக தேர்வு செய்த தமிழக அரசுக்கும், தலைமை ஆசிரியருக்கும், பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
ai healthcare products