/* */

செய்யாறு அரசு மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

HIGHLIGHTS

செய்யாறு அரசு  மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடந்த  போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வாசிக்க அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செய்யாறு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 2500 மாணவ மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், முன்னாள் நகர செயலாளர் சம்பத், சின்னதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Updated On: 12 Aug 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....