வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப்  நேரில் ஆய்வு
X

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் கூடுதல் கலெக்டர் பிரதாப்

செய்யாறு ஊராட்சி ஒன்றிய கிராம பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் கீழ்புதுபாக்கம் ஊராட்சியில் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் கூடம், வேளியநல்லூர் ஊராட்சியில் பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் மற்றும் பசுமை வீடு திட்டத்தில் பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள், வடுங்கம்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், மாரியநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள், பல்லி ஊராட்சியில் மேட்டு காலனியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் உள்ளிட்ட திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது செய்யாறு கோட்டம் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சுரேஷ்குமார், செய்யாறு கோட்டம் உதவி செயற்பொறியாளர் எஸ்.டார்வின்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தி.மயில்வாகனன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் பிரதாப் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்க்கு அனைத்து திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!