செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்

செய்யாறு அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
X

மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் அடிக்கல் நாட்டிய செய்யாறு எம் எல் ஏ ஜோதி

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

5-வது நிதி ஆணையம் சுகாதார மானிய திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியில் இந்த மருத்துவமனையில் புதிதாக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா். அதேவேளையில், செய்யாறு மருத்துவமனைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மருத்துவமனை தலைமை மருத்துவா் பாண்டியன், நகராட்சிப் பொறியாளா் சிசீல்தாமஸ், பணிப் பொறுப்பாளா் சாந்தகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு அருகே நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பூதேரி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சார்பில் சிறப்பு நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 19 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி உடன் முடிவடைந்தது.

நினைவு நாளான இன்று காலை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

மேலும் அவர் பேசும் போது தற்போதைய திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பில் சேர்வதற்கு உதவித்தொகை , பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் மற்றும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் போன்று நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் அவர்கள் மாணவர்களுக்காகவும் பெண்களுக்காகவும் செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் முனைவர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா ராஜா, ஊராட்சி ஒன்றிய செயலாளர் தினகரன், பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக உதவியாளர்கள், மாணவ மாணவியர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட அலுவலர் முனைவர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Next Story
ai in future agriculture