ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்

ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்
X
கடைக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடைக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரைபோலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் எதிர்வீட்டில் வசித்து வரும் 20 வயது வாலிபருடன் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி வர சிறுமியை அனுப்பியுள்ளனர். அப்பொழுது வாலிபர் சிறுமியை கடைக்கு அழைத்துச் செல்லாமல், அப்பகுதியில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள புதரில் வைத்து சிறுமிக்கு வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா

செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். பெரியப்பா உறவு முறையான கூலி தொழிலாளி சிறுமி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம்.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாயார் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார். பின்னர் சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோனியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மாணவியின் பெரியப்பாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business