நீட்டிற்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்ச்சி!

நீட்டிற்கு எதிராக கையெழுத்து பெறும் நிகழ்ச்சி!
X

திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற  நீட் விளக்கு நம் இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

செய்யாற்றில் திமுக இளைஞரணி சார்பில் நீட் விளக்கு நம் இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் செய்யாறு தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் விளக்கு நம் இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தங்களது கையொப்பத்தை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், நகர இளைஞரணி அமைப்பாளர்கள், உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்யாறு அருகை திமுக தேர்தல் பணி குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் திமுக தேர்தல் பணி குழு பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் பணிக்குழு சார்பில் நாடாளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு நடைபெற்ற ஒன்றிய தேர்தல் பணி குழுவினர் பூர்வாங்க பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி துவக்கி வைத்து பேசினார்.

செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் , மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் , கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்