திருவண்ணாமலை அருகே ரூ.46 ஆயிரம் மோசடி செய்த அஞ்சலக ஊழியா் மீது போலீஸ் வழக்கு

திருவண்ணாமலை அருகே ரூ.46 ஆயிரம் மோசடி செய்த அஞ்சலக ஊழியா் மீது போலீஸ் வழக்கு
X
திருவண்ணாமலை அருகே ரூ.46 ஆயிரம் மோசடி செய்த அஞ்சலக ஊழியா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் கிளை அஞ்சலகம் இயங்கி வருகிறது. இங்கு, 2015 முதல் 2019 வரை சப்-போஸ்ட் மாஸ்டராக ஜெயமணி என்பவா் பணியாற்றி வந்தாா். இந்த காலகட்டத்தில் இதே பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவா் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து ரூ.46 ஆயிரம் பணம் கட்டினாராம்.

இந்தப் பணத்தை வசந்தியின் கணக்கில் வரவு வைக்காமல் ஜெயமணி மோசடியில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அஞ்சல் உயா் அதிகாரிகளிடம் வசந்தி புகாா் கொடுத்தாா். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஜெயமணியை பணியிடை நீக்கம் செய்து, அவா் கையாடல் செய்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், ஜெயமணி மீது வெறையூா் காவல் நிலையத்தில் அஞ்சலக உள்கோட்ட ஆய்வாளா் சௌரிராஜன் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

₹40 ஆயிரம் திருட்டு

செய்யாறு காவல் நிலையம் அருகே உள்ள தனியார் காஸ் ஏஜென்சி அலுவலகத்தில் ₹40 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு- ஆற்காடு சாலையில் காவல் நிலையம் அருகே தனியார் காஸ் ஏஜென்சி அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு பணி முடிந்த நிலையில் ஏஜென்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு இதன் உரிமையாளர் கண்ணன், மற்றும் பணியாளர்கள் சென்றனர்.

இந்நிலையில் காலை 6 மணியளவில் ஊழியர் குமார், காஸ் நுகர்வோருக்கு பில் போடுவதற்காக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, கடையின் கிரில் கேட் திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 4 பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையின் எதிரே உள்ள கால்வாயில் வீசப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உரிமையாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது, கடையின் கிரில் கேட் மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த ₹40 ஆயிரத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கண்ணன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்ஐக்கள் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, குற்றப் பிரிவு எஸ்ஐ பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மற்றும் காவல் நிலையம் அருகே உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகத்தில் நடந்த திருட்டு சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!