செய்யாற்றில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாம்

செய்யாற்றில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாம்
X

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஜோதி எம்எல்ஏ

செய்யாற்றில் பழங்குடியினருக்கான மருத்துவ முகாமமில் 889 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற பழங்குடி சமுதாய மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 889 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜன் பாபு, கிரிஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ .ஜோதி பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

பொதுமக்களுக்கு அடிப்படை உரிமைகள், கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். மலைவாழ் மக்களுக்கான இந்த சிறப்பு மருத்துவ முகாமில் அனைவரும் பயன்பெற வேண்டும், அடிப்படை உரிமைகளான ஆதார் என் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கப்பெற வேண்டும், மாணவர்கள் கல்வி பயில ஊக்குவிக்கப்பட வேண்டும், குழந்தை திருமண சட்டத்தை பின்பற்றி குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என ஜோதி எம்எல்ஏ பேசினார். இதைத் தொடா்ந்து, அவா் பொதுமக்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் பழங்குடியின மக்கள் அனைத்து வகையிலும் பயன்பெற வேண்டும் என்றும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் குறித்து தெளிவு பெற வேண்டும் என்று பேசினார். மாவட்ட தாய் சேய் நல மருத்துவர் தமீம் காமன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் குறித்து பேசினர்.

முகாமில், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஷா்மிளா தலைமையில் 5 மருத்துவா்கள் உள்பட 80 போ் அடங்கிய மருத்துவக் குழுவினா் பங்கேற்று பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

இதில் 43 கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 30 பேருக்கு எக்ஸ்ரே, 56 பேருக்கு இசிஜி, 618 பேருக்கு ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 13 பேருக்கு சா்க்கரை நோய் மாத்திரைகள், 5 பேருக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில் மொத்தம் 889 போ் பயனடைந்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கமலக்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் மகாராஜன், ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாதவன், சுகாதார ஆய்வாளர்கள் கணேஷ் , உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!