ஆரணி, செய்யாறு வட்டங்களில் குறை தீர்வு கூட்டம்
மனுக்களைப் பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செய்யாறு தாலுகாக்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் வரப்பெற்றன.
குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (நிலம்) தேன்மொழி தலைமை வகித்தாா். நேர்முக உதவியாளா் குமாரவேலு மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.
கூட்டத்தில், மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், பட்டா வழங்கக் கோருதல், நில திருத்தம், பரப்பு திருத்தம், பட்டா ரத்து, ஆதரவற்ற விதவை சான்றிதழ், ஆக்கிரமிப்பு அகற்றம், இலவச மனைப் பட்டா, ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை சீரமைக்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 33 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளா் தேன்மொழி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
செய்யாறு: குறைதீா் கூட்டத்தில் 55 மனுக்கள்:
செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 55 மனுக்கள் வரப்பெற்றன.
செய்யாறு வருவாய்க் கோட்ட அளவிலான பொது மக்கள் குறைதீா் கூட்டம் சாா் - ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பொது மக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா். வீட்டு மனைப் பட்டா கோரி 8 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 11, பட்டா ரத்து கோரி 4, பட்டா மாற்றம் கோரி 8, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 6, ஆதரவற்ற விதவை சான்றிதழ் கோரி 2, நிலம் அளவிடக் கோரி 2 பேரும் மற்றும் இதர துறை மனுக்கள் 14 உள்பட மொத்தம் 55 மனுக்கள் அளித்து இருந்தனா்.
கூட்டத்தில், அலுவலக கண்காணிப்பாளா் பிரபு, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu