செய்யாற்றில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சார்பாக அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, டிஆர்ஓ ராம பிரதீபன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், சார் ஆட்சியர் பல்லவி வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
மாவட்டத்திலுள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒரே குடையின் கீழ் அமர்ந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேருவதை உறுதி செய்வதை உங்கள தேடி உங்கள் ஊரில் முகாமில் இலக்காக வைத்து செயல்படுத்தப்படுகின்றது. கிராமங்கள் தோறும் அனைத்து துறை அலுவலர்களும் அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்து அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் உரிய கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றனர் உரிய ஆலோசனைகள் முறையாக வழங்கப்படுகிறது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 124 முகாம்களில் 81 ஆயிரம் மனுக்கள் பெற்று 65 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டு மாநிலத்தில் முதலிடம் வகிக்கின்றது. வருவாய்த்துறை , வேளாண்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 671 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
பின்னர் ஞானமுருகன் பூண்டி மக்களிடம் மனுக்கள் பெற்று சாலை பணிகள் விரிவாக்கத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உரிய மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். என்பது பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவுரைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பயனாளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குனர் மணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரமேஷ், வட்டாட்சியர் வெங்கடேசன், பீடிஓக்கள் ஒன்றிய குழு தலைவர்கள் ஒன்றிய செயலாளர்.சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
முன்னதாக உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்யாறு பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் காய்கறிகளின் தரத்தை கேட்டறிந்தார் .மேலும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். உற்பத்தி பொருட்களை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேளாண்மை துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu