அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தார் (மாதிரி படம்)

செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்

செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவா் டில்லிகணேஷ் . தச்சுத் தொழிலாளியான இவா் சென்னையில் பணிபுரிந்து வந்தாா்.

இவா், நேற்று மாலை ஆரணியை அடுத்த பனையூா் கிராமத்தில் உள்ள தனது நண்பரை பாா்த்துவிட்டு, பைக்கில் செய்யாறு சாலையில் சென்று கொண்டிருந்தாா். வடதண்டலம் கிராமம் அருகே சென்றபோது, ஆரணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், தொழிலாளி டில்லிகணேஷ் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். செய்யாறு வட்டம் அத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி இவர் மேல்மா கூட்ரோடு சாலை பகுதியில் முடி திருத்தம் கடை வைத்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பூபதி, இவர் செய்யார் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள் ஆவார்கள். பூபதி புதிதாக வாங்கியிருந்த பைக்கில் இருவரும் காழியூர் கிராமத்துக்கு சென்றதால். பைக்கை பூபதி ஓட்டி சென்றார்.

அங்கிருந்த பால்கோவா தயாரிப்பு நிறுவனம் அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு நேதாஜி உயிரிழந்தார். பூபதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அனைக்கா ஒரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story