சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது
![சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது](https://www.nativenews.in/h-upload/2024/05/28/1908921-pocso.webp)
வாலிபர் போக்சோவில் கைது (மாதிரி படம்)
திருவண்ணாமலையில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை பே கோபுரம் 10வது தெருவை சேர்ந்தவர் தீனா என்ற வெற்றிவேல். இவர் திருவண்ணாமலை பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கமாம். அப்போது அந்த நண்பரின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த லேப் டெக்கரேஷன் படிக்கும் 17 வயது உள்ள மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இயல்பாக இருவரும் சேர்ந்து செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தனது செல்போனில் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோவை அந்த மாணவியின் தாயிடம் காட்டி விடுவதாக வெற்றிவேல் மிரட்டி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியரிடம் பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வெற்றிவேல், தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மகளிர் போலீசில் மாணவியின் தாய் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வாலிபர் தீனா என்ற வெற்றிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
6 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி, இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தில் சேர்ந்த வாலிபர் செல்போன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அந்தச் சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அந்த வாலிபர் அந்த சிறுமியிடம் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும் இது வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தாராம்.
உடனடியாக அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை கைது செய்தனர். பின்னர், அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu