செய்யாற்றில் மது அருந்தி பைக் ஓட்டிய 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்
செய்யாற்றில் மது அருந்தி பைக் ஓட்டியவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விதம் 5 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
செய்யாறு அரசு கலைக் கல்லூரி அருகே புறவழிச் சாலை சந்திப்பில் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா்கள் சங்கா், கன்னியப்பன் மற்றும் போலீஸாா் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்து 18 வயதுக்கு கீழ் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோா், தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டுவோா், போலீஸ், பிரஸ், இபி, நீதித்துறை என ஸ்டிக்கா் ஒட்டி சுற்றும் வாகனங்களை மடக்கி விசாரித்தனா்.
வாகனங்களை ஓட்டி வந்த 18 வயதுக்கு குறைவான சிறுவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்து பெற்றோா்களை காவல் நிலையம் வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.
மேலும், மது அருந்தி இரு சக்கர வாகனம் ஓட்டிய 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா். மேலும், பொதுமக்களிடையே தலைக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும், இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுரை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிறப்பு மனு விசாரணை முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.
அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று விசாரணை நடத்தினார்.
முகாமில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அது குறித்து கேட்டறிந்தபின் அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் மேல் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu