செய்யாறு நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது

செய்யாறு நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேர் கைது

பைல் படம்

செய்யாறில் நிதி நிறுவனத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

brதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே விண்ணவாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34) என்பவர் செய்யாறு பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம் போல் இரவு உணவு சாப்பிட சென்றபோது கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.34 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மண்டி தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தொண்டிபட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27), அவரது நண்பர் ஈரோடு மாவட்டம் நாப்பியாலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் இவர்கள் செய்யாறில் நிதிநிறுவனம், கடைகள், ஸ்டுடியோ என பல இடங்களில் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story