/* */

தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது

தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது
X

பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில்  கைது செய்யப்பட்ட தாமோதரன், கணபதி.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள பாவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 36). இவரின் கணவர் ஏகாம்பரம். கணவன்-மனைவி இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்துக்கு மருந்து வாங்கச் சென்றனர்.

அங்கு, மருந்து வாங்கி விட்டு அங்கிருந்து திரும்பி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். தூசி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த வழியாக பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீெரன சத்யா அணிந்திருந்த நான்கரை பவுன் தாலி சரடை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஏகாம்பரம் தூசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று இரவு அப்துல்லாபுரம் கூட்ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சைகை காண்பித்து நிறுத்தினர். அதில் ஒருவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். 2 பேர் சிக்கினர்.

சிக்கிய இருவரும், காஞ்சீபுரத்தை அடுத்த திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தாமோதரன், கணபதி என்றும், தப்பியோடியவர் சங்கர் என்றும் தெரியவந்தது. பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பாவூர் கிராமத்தை சேர்ந்த சத்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடை பறித்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கணபதி, தாமோதரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 6 March 2022 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்