கள்ளத்தனமாக எரி சாராயம் விற்ற 3 பேர் கைது

கள்ளத்தனமாக எரி சாராயம் விற்ற 3 பேர் கைது
X
1980 லிட்டர் எரிசாராயம், மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல், எரி சாராயம் விற்பனை செய்த 3 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுருட்டல் கிராமத்தில் தூசி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் செய்யாறு மதுவிலக்கு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் செய்யாறு மதுவிலக்கு பிரிவு உதவி காவல் ஆய்வாளர் மகாராணி மற்றும் செய்யாறு மதுவிலக்கு பிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய எரிசாராய வேட்டையில் சுருட்டல் கிராமத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது வீட்டின் அருகில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1960 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குணசீலன் என்பவர் தனது வீட்டின் அருகில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 12 லிட்டர் எரிசாராயத்தையும் கைப்பற்றினர்.

கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது வீட்டின் அருகில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி எரிசாராயம் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!