/* */

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை பணியாளர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலி

இருசக்கர வாகன விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை பணியாளர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலி
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவை அடுத்த நெடும்பிரை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் நிலத்திற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கால் கூட்ரோடு பகுதியில் பூச்சி மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் அழிஞ்சல்பட்டு கிராமம் மெயின் ரோட்டை கடக்க முயற்சிக்கும் போது ,அந்த வழியே வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஜங்குசர்மா என்ற நபர் திடீரென்று குறுக்கே வந்தார்.

இதனால் ரஞ்சித் குமாரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் தன் குழந்தையுடன் அவர் கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தை பிரவீனா மற்றும் ஜங்குசர்மா ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தூசிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 July 2021 7:02 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...