திருவண்ணாமலை அருகே கொடி மாயமானதை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அருகே கொடி மாயமானதை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்
X

சிங்கம்பூண்டியில் பா.ஜ., கொடியை மர்ம நபர்கள் அகற்றியதை கண்டித்து தேசூர் பேரூராட்சி தேரடிவீதியில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கம்பூண்டியில் பா.ஜ., கொடியை மர்ம நபர்கள் அகற்றியதை கண்டித்து தேசூர் தேரடி வீதியில்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த சிங்கம்பூண்டியில் இரவோடு இரவாக பா.ஜ., கொடியை மர்மநபர்கள் அகற்றினர். இதனை கண்டித்தும், கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேசூர் பேரூராட்சி தேரடிவீதியில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகி திருமலை, சிங்கம்பூண்டி கிராம கிளை கழக நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் நித்தியானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கட்சி கொடியை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!