செங்கம் அருகே தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டம்

தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
மோசமான சாலைகளை சரி செய்ய கோரி தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அந்தனூரை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்கள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனை சரி செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2 தினங்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக நேற்று முன்தினம், மற்றும் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் அந்தனூர் கிராம பகுதியில் தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
தேங்கி நின்ற தண்ணீரில் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் சென்று வர மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலைகளில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் மழைநீர் செல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும் என்றும் தெருகளில் சாலை வசதிகள் செய்திட கோரியும் அப்பகுதி பெண்கள் மழைநீரில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால், சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
அதேபோல் செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியில் தெருக்கள் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தெருக்களில் சென்றுவர முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேங்கியுள்ள மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இது குறித்து நாங்கள் பலமுறை ஊராட்சி மன்ற அதிகாரிகளிடமும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு வழங்கியுள்ளோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu