கட்டிட வேலைக்கு சென்ற பெண் மாயம்: காவல்துறையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
செங்கம் அருகே கூலி வேலைக்குச் சென்று மாயமான பெண்ணை கண்டுபிடித்து தரக் கோரி, உறவினா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமம் கௌதம் நகரை சேர்ந்த கோவிந்தன் மனைவி காமாட்சி என்பவர் நாள்தோறும் திருவண்ணாமலை பகுதியில் கட்டிட கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் காமாட்சி கடந்த கடந்த 8 மே் தேதி கட்டிட கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பாதால் உறவினர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் கட்டிட கூலி வேலைக்கு சென்ற காமாட்சி காணவில்லை என புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போன காமாட்சியை கண்டுபிடிக்க துண்டு பிரசுரம் விளம்பரம் மற்றும் வழித்தடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காணொளிகளை வைத்து தொடர்ந்து அவரை தேடி வரும் நிலையில்,
காமாட்சி நிலை குறித்து 10 நாட்கள் ஆகியும் எந்த தகவலையும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை, நாங்கள் அளித்த புகாரியின் மீது போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, என ஆத்திரமடைந்த உறவினர்கள் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இறையூர் கிராமத்தில் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட காமாட்சி உறவினர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் காணாமல் போன காமாட்சியை கண்டுபிடிப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, காமாட்சி என்பவரின் உறவினர்கள் சாலை மறிகளை கைவிட்டு கலைந்து சென்ற பின்னர் வாகன போக்குவரத்து சரி செய்து வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு காவல்துறையினர் கொண்டு வந்தனர்.
சில வாகனங்களை பக்கிரிபாளையம் கூட்டுச் சாலையில் இருந்து செங்கம் நகருக்குள் அனுப்பி, போளூா் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு திருப்பிவிட்டனா். இதனால், செங்கம் நகருக்குள் அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu