செங்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

செங்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு
X

தோக்கவாடி புதிய பேருந்து நிலையம் போளூர் ரோடு அருகில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார்.

செங்கம் ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செ அகரம், அஸ்வநாகசுரணை ஊராட்சிகளில், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இலவச வீடு வழங்கும் ஆணை மற்றும் 100 நாள் பணியாளர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற தலைவர்கள் செ.அகரம் ராதா ராஜசேகர், அஸ்வநாகசுரணை மகேஸ்வரி மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செங்கம் டவுன் தோக்கவாடி புதிய பேருந்து நிலையம் போளூர் ரோடு அருகில் வெயில் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலக செயலாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி துணை தலைவர் அருள்ஜோதி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story