சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
X

பாசனத்திற்காக அணையை திறந்து வைத்த செங்கம் எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் வலது புறம் மற்றும் இடது புற கால்வாயில் பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக கன மழை பெய்தது. மேலும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் சாத்தனூர் அணை வலது புறம் மற்றும் இடது புறம் கால்வாயில் உபரி நீரை திறந்து விட முடிவெடுக்கப்பட்டது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி விவசாய பாசனத்திற்காக அணையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தொழில்நுட்ப அதிகாரிகள் , ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!