குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர் எ வ வேலு நேற்று திறந்து வைத்தார்.
செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளுக்கு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), கூடுதல் கலெக்டர் பிரதாப், உள்பட பொதுப்பணித்துறை நீர்வள அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 27-ந்தேதி வரை 18 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 265 கன அடி வீதமும் (அதாவது 412.20 மி.கன அடி), 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 8 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 240 கன அடி வீதமும் (அதாவது 165.92 மி.கன அடி) ஆக மொத்தம் 26 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,432.76 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu