/* */

புதைப்பதற்கு அனுமதி மறுத்ததால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே புதைப்பதற்கு நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

புதைப்பதற்கு அனுமதி மறுத்ததால் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
X

பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட அண்ணாமலை கொட்டா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் வடமாத்தூரில் இருந்து கண்ணகுருக்கை செல்லும் சாலையில் பல ஆண்டு காலமாக குறிப்பிட்ட இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த மயான இடம் நீர்ப்பிடிப்பு பாதையில் அமைந்துள்ளதாக கூறி அந்த இடத்தை மயானமாக பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக அப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி உடல்நல குறைவால் இறந்துள்ளார். அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்திற்கு உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூதாட்டியின் உடலை இந்த இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மூதாட்டியின் உடலை வடமாத்தூர்-கண்ணகுருக்கை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கம் தாசில்தார் முனுசாமி, திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தில் அடக்கம் செய்யவும், ஒரு வாரத்தில் மயான இடம் தொடர்பாக ஊர் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மூதாட்டியின் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலை இரவுஅடக்கம் செய்தனர்.

Updated On: 25 Jan 2022 7:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி