செங்கம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை காணொளி மூலம் துவக்கம்

செங்கம் அருகே சிட்கோ தொழிற்பேட்டை காணொளி மூலம் துவக்கம்
X

புதிய சிட்கோ தொழிற்பேட்டை தொடக்கவிழாவில் துணை சபாநாயகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

SIDCO Industrial Estate - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதிதாக சிட்கோ தொழிற்பேட்டை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

SIDCO Industrial Estate - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பெரிய கோலா பாடி பகுதியில் தெரு விளக்கு, மழை நீர் வடிகால் சாலை வசதியுடன் உருவாக்கப்பட்ட புதிய சிட்கோ தொழில் பேட்டையை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட மன்ற துணைத்தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டாட்சியர் முனுசாமி,சிட்கோ கிளை மேலாளர் சத்யராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொழில்பேட்டை குறித்து விளக்கிப் பேசினர்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business