செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
செங்கம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கணேசர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் ரோட்டரி சங்கம், மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவமனை, மற்றும் பர்வதகுலசேகர முதலியார் அறக்கட்டளை, கணேசர் குரூப்ஸ் இணைந்து பொதுமக்களின் நலன் கருதி இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.

முகாமில் சுற்றுப்பகுதியில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து முகாமில் பங்கேற்றனர். கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தவர்களுக்கு, முதற்கட்டமாக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிசன் அளவு, வெப்பமானி போன்ற பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. 151 நபர்களை பரிசோதனை செய்து கோவிட்-19 தடுப்பூசி செலுத்தினார்.

உதவி மருத்துவர்கள், மருத்துவ ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வக நுட்பணியாளர்கள், சுகாதார களப்பணியாளர்கள் போன்றோர் முகாம் பணிகளை கண்காணித்தார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!