செங்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி

செங்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி
X

பாஜக சார்பில்  சுதந்திர தினத்தை ஒட்டி  நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணி 

செங்கத்தில் 78-ஆவது சுததந்திர தின தினத்தையொட்டி பாஜக சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் 78-ஆவது சுததந்திர தின தினத்தையொட்டி செங்கத்தில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவா் செங்கம் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ், செயலா் பாலாஜி, கல்வியாளா் அணி மாவட்டச் செயலா் பழநிவேல்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியம், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு பேரணியை தொடங்கிவைத்தனா்

துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வரை சென்ற பேரணியின் முடிவில், தேசியக் கொடிக்கு மரியாதை செய்து இனிப்பு வழங்கினா்.

இளைஞரணி மாவட்டச் செயலா்கள் ராமதாஸ் கஜேந்திரன், இளைஞரணி ஒன்றியத் தலைவா்கள் பிரேம்குமாா், டா்பன்பிரபு, திருப்பதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள் ,பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாமரைக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணையின்படியும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகன் அவர்களின் ஆலோசனையின் படியும் பட்ஜெட் விளக்க பொது கூட்டமும் பாராளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்தில் நடைபெற்றது.

மாநில பொது செயலாளர் ,பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்தியாயினி , மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்,

நிகழ்ச்சியில் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் அறவாழி, மாவட்ட துணை தலைவர்கள் ராஜ்குமார், சேகர் , ஒன்றிய குழு தலைவர்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!