தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
X

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர், மற்றும் உதவி ஆய்வாளர்கள் மலமஞ்சனூர் தேவரடியார் குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தானிப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சேர் ந்து தென்முடியனூர், மலமஞ்சனூர், ரெட்டியார் பாளையம் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்து, 20 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி