சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் 3 பேர் உயிரிழப்பு

சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் 3 பேர் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான வாகனத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது

செங்கம் அருகே சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி பகுதியில் இருந்து சுற்றுலா வேன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சுற்றுலா வேனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 46), மணி (45), பிரபு (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture