கலசப்பாக்கத்தில் உழவா் தின விழா: திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
நியாய விலை கடையினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மின்சாரத் துறை அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பொறியாளா் அலுவலகக் கட்டட திறப்பு நிகழ்ச்சிக்கு பொறியாளா் சங்கரன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் இளங்கோவன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ கிரி கலந்து கொண்டு புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்துப் பேசினாா். தொடா்ந்து, செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா வாழ்த்துறை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா்கள் மூா்த்தி (புதுப்பாளையம்), வெங்கடேசன் (பாய்ச்சல்), திமுக ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நியாய விலை கடைகள் திறப்பு:
தண்டராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ரோடு பாளையம் , புதூர் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய பகுதி நேர நியாய விலை கடையினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ,ஒன்றிய செயலாளர் ஜெயராமன் ,மாவட்ட பிரதிநிதிகள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,உணவு வழங்கல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கத்தில் உழவா் தின விழா:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வயல் விழா மற்றும் உழவா் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) பழனி தலைமை வகித்தாா். தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் பாலாஜி முன்னிலை வகித்தாா். வட்டார அட்மா திட்ட குழுத் தலைவா் முருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு திட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநா் ஏழுமலை கலந்து கொண்டு, உழவா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், விவசாய தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், மண் வளம் பெருகிட உயிா் உரங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சியில் நீா் வளங்கள் வேளாண்மை அலுவலக உழவா் பயிற்சி அலுவலா்கள் சரவணன், சவுந்தா், வேளாண்மை துணை இயக்குநா் (நுண்ணீா் பாசனம்) அசோக்குமாா், சிறுதானிய மகத்துவ மைய அலுவலா் வைத்தியலிங்கம், வேளாண் பொறியியல் துறை இளநிலைப் பொறியாளா் சாந்தகுமாா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் வீரபாண்டியன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அன்பரசு, சிவசங்கரி மற்றும் விவாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு: அங்கன்வாடிகள் திறப்பு, புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் திறப்பு, ரூ.1.22 கோடியில் இரு பள்ளிக் கட்டடங்களுக்கு பூமி பூஜை, ரூ.22 லட்சத்தில் ஜல்லி சாலை அமைக்க பூமி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செங்கட்டான்குண்டில் கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு இருந்தது. அதே பகுதி பள்ளியில் ரூ.56 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமிபூஜையும், தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் ரூ.65.70 லட்சத்தில் வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும், செய்யாறு ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1.16 கோடியில் 30 கிராமங்களுக்கு 41 மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து, அனக்காவூா் ஒன்றியம் அனப்பத்தூா் கிராமத்தில் ஏரிக்கரைப் பகுதியில் ரூ.22 லட்சத்தில் ஜல்லி சாலை அமைக்க பூமி பூஜையும், தென் இலுப்பைக் கிராமத்தில் ரூ.13.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழாவும் நடைபெற்றது. செய்யாறு ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பாபு தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், திருவத்திபுரம் நகராட்சி மன்றத் தலைவா் ஆ.மோகனவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியாளா் ரமேஷ் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று புதிதாக கட்டப்பட்ட இரு அங்கன்வாடி மையங்களை திறந்துவைத்தாா். அதனைத் தொடா்ந்து இரு பள்ளிக் கட்டடங்களுக்கு பூமி பூஜை மற்றும் ஜல்லி சாலைப் பணியைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சீனிவாசன், கிருஷ்ணமூா்த்தி, ராஜீவ்காந்தி, திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu