திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருந்த மூன்று குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது

தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவிக்கும் தண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த சைல்டு லைன், சமூக நலத்துறை, காவல்துறை அலுவலர்கள் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணத்தை பற்றி எடுத்துக்கூறி மாணவியை மீட்டனர்.

இதேபோல் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் மலைப்பாம்பு அடி பல்லியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் மேல்பாய்ச்சார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த வாலிபருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் 3 சிறுமிகளும் திருவண்ணாமலை அருகே பெரும்பாக்கம் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் அசோக், தினேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், முத்துக்குமாரசாமி, வட்டார விரிவுரையாளர் அம்சவல்லி, ஊர் நல அலுவலர் ராணி மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உதவியுடன் ஒரே நாளில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!