திருவண்ணாமலை: கிராம வறுமை குறைப்பு திட்ட பயிற்சி பட்டறை
உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் கலந்துகொண்டு கிராம வறுமை ஒழிப்பு திட்டம் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பயிற்றுநர்களு க்கு எடுத்துரைத்தார்.
செங்கம் வட்டத்தில் கிராம வறுமை குறைப்பு திட்ட பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராம வறுமை ஒழிப்பு திட்டம் ( village poverty Reduction plan ) பயிர்ச்சி தயாரிக்க ஏதுவாக அனைத்து கிராம சமுதாய வள பயிற்றுநர் மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர் களுக்கான பயிற்சிப் பட்டறை இன்று செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் சிறப்பு விருந்தினராக உதவி இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் கலந்துகொண்டு கிராம வறுமை ஒழிப்பு திட்டம் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பயிற்றுநர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தற்போது அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்று காரணமாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் தடுப்பூசி செலுத்தாத நபர்களை ஊக்கப்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினார்.பயிற்சியின் நோக்கங்களாக உரிமை சார்ந்த திட்டங்கள், வாழ்வாதார திட்டம், பொது சொத்துக்கள், சேவைகள் வள மேம்பாடு திட்டம், ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்ட இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu