திருவண்ணாமலை: பல்வேறு வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: பல்வேறு வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த ஹூசைன்கான் (வயது 33) என்பவரை வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தண்டராம்பட்டு போலீசார் கைது செய்தனர்.

மலமஞ்சனூர்புதூர் கிராமத்தை சேர்ந்த ரவி (49) என்பவரை சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டராம்பட்டு போலீசார் கைது செய்தனர்.

வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த கோகுல் (22) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா இசையனூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் (26) ஆகியோரை கஞ்சா கடத்தல் வழக்கில் செய்யாறு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் சாராயம் காய்ச்சிய 45 பேர், மணல் கடத்திய 6 பேர் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 131 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture