செங்கம் பகுதி வளர்ச்சி திட்ட பணிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கம் பகுதி வளர்ச்சி திட்ட பணிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

செங்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ்  அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செ. அகரம், பெரிய கோலா பாடி, உச்சிமலை குப்பம், கரியமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் திட்ட பணிகளான இலவச வீடு கட்டுதல் தார் சாலை அமைத்தல், ஜல்லி சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் சத்துணவு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சத்துணவினை உண்டு ஆய்வு செய்தார்.

பெரிய கோலா பாடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் குவாரிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேல் பெண்ணாத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சி தலைவர் அங்கிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சக்திவேல், வட்டாட்சியர் முனுசாமி, கனிமவள துணை இயக்குனர் பெருமாள், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself