திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பு
X

அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றியம், ஜமுனாமரத்தூா், தெற்கு ஒன்றியம் செங்கம் நகரத்துக்கு உள்பட்ட அன்வராபாத், குயிலம், புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம், கல்லாத்தூா், ஊா்கவுண்டனூா், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், மேல்செங்கம், அந்தனூா், மேல்பள்ளிப்பட்டு, மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, கட்டமடுவு, நீப்பத்துறை, இளங்குண்ணி, ஆண்டிப்பட்டி, மேல்வணக்கம்பாடி, பக்கிரிபாளையம், மேல்புழுதியூா், ஆனைமங்கலம், செங்கம் துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம். கலியபெருமாளை ஆதரித்து தெற்கு மாவட்டச் செயலரும், போளூா் எம்எல்ஏவுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி வாக்கு சேகரித்து பேசியதாவது:-

செங்கம் - போளூா் சாலை நீதிமன்ற வளாகத்தில் இருந்து மண்மலை வரை அமையவுள்ள புறவழிச் சாலைப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், செங்கம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளா் கலியபெருமாள் வெற்றி பெற்றவுடன், அந்த புறவழிச் சாலைத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக ஜோலாா்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறும். மேல்செங்கம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள 11 ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட மத்திய மாநில விதைப் பண்ணையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் மகரிஷிமனோகரன், அசோக், தேமுதிக மாவட்டச் செயலாளர் நேரு, தலைமைக் கழக பேச்சாளா்கள் அமுதா அருணாச்சலம், வெங்கட்ராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்ந்து துரிஞ்சாபுரம் ஒன்றிய கிராமங்களான நூக்காம்பாடி, மங்கலம், களஸ்தம்பாடி, வேடந்தவாடி, பூதமங்கலம், உள்ளிட்ட கிராமங்களில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நாடகக் கலைஞர்கள் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தும் நடனமாடியும் மக்களைக் கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசூரங்களையும் பொதுமக்களிடையே வழங்கித் திமுக பொதுமக்களுக்குச் செய்த துரோகங்களையும் எடுத்துரைத்தார். அப்போது பெண்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், தேமுதிக நிர்வாகிகள் , உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பாரியூர் குண்டம் விழா குறித்து ஆலோசனை..!