என்னுடைய வாழ்க்கையை மாற்றியது திருவண்ணாமலை; பாஜக தலைவர் அண்ணாமலை

என்னுடைய வாழ்க்கையை மாற்றியது திருவண்ணாமலை; பாஜக தலைவர் அண்ணாமலை
X

நடைப்பயண நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை

என்னுடைய கல்லூரி காலங்களில், தொடர்ச்சியாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக சார்பில் எண் மண் என் மக்கள் என்ற பிரச்சார நடை பயண நிகழ்ச்சி இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.

நடைபயண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்

திருவண்ணாமலை என்ற ஆன்மீக ஸ்தலத்தில் நம்முடைய யாத்திரை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

என்னுடைய தாத்தா அடிக்கடி இங்கே வருவார். இங்கிருந்து 150 கிலோ மீட்டர் என்னுடைய கிராமம். தொலைவில் இருந்தாலும் கூட என்னுடைய தாத்தா அடிக்கடி வரக்கூடிய ஊர் திருவண்ணாமலை. அதனால் தான் இங்கு இருக்கிற சுவாமியின் பெயரை வைக்க வேண்டும் என எனக்கு அண்ணாமலை என பெயரை சூட்டினார்.

கல்லூரியில் படிக்கும் போது தொடர்ச்சியாக எல்லா பௌர்ணமி நாட்களில் இங்கு வந்து கிரிவலம் செல்லும் பாக்கியம் கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்லும் போது நானும் ஒரு மனிதனாக கிரிவலம் பாதையில் இருப்பேன். ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பௌர்ணமி அன்று கிரிவலம் வந்துள்ளேன்.

என்னுடைய வாழ்க்கை மாற்றியது எல்லாம் இந்த சாலைகளும் அண்ணாமலையார் தான்.

திருவண்ணாமலையின் மிகப்பெரிய ராஜாக்கள் சிவபெருமானை மண்டியிட்டு வணங்கி விட்டு சென்று பெரிய ஒரு அற்புதமான கோவிலை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது இந்த கோவிலில் அநியாயம் நடக்கிறது.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறுவார்கள். கோபுரத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு தான் நாம் கோவிலுக்குள் செல்வோம் . இன்றைக்கு கோபுரத்தை மறைத்து ஒரு வணிக வளாகம் கட்டும் முயற்சியில் இந்த திமுக அரசு இறங்கி இருக்கிறது. இதை கண்டித்து பாஜக போராட்டம் நடத்திய போது கைது செய்து அடைத்து வைத்தார்கள். கடைசியில் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

மோடி என்ற மாபெரும் தலைவர் நமக்கு கிடைத்துள்ளார். அதை இழப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். தலைவர் மோடி பயம் என்னவென்று தெரியாத தலைவர், ஏழை மக்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து தலைவர் ,இத்தனை குணம் கொண்ட ஒரு தலைவர் கிடைப்பது அரிது, அதை ஆண்டவன் அனுப்பி வைத்துள்ளார் . திருவண்ணாமலை மக்களுக்கு இந்த ஆன்மீக பூமியில் ஒரே ஒரு அன்பு கேள்வி? இந்த வாய்ப்பை நாம் தவறவிட போகிறோமா ?

பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த ஒரு புனித ஷேத்திரம் இந்த திருவண்ணாமலை ஆகும்.

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, ஆசிரமங்களுக்கு உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வருகிறார்கள். அவர்களுக்கு நாம் வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோமா, ரோடு வசதிகள் சரியாக இருக்கிறதா ,பஸ் நிலையம் ரயில்வே நிலையம் சரியாக இருக்கிறதா, எத்தனை ஜீவசமாதிகள் இங்கு உள்ளது, இந்தியாவிலேயே அதிக ஜீவ சமாதிகள் இந்த மண்ணில் தான் உள்ளது , இதனை நாம் பாதுகாக்க வேண்டாமா? எனவே பாஜக வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை தாருங்கள் இந்த புண்ணிய பூமியை நாங்கள் மாற்றி காண்பிக்கிறோம் என பேசினார்.

செங்கம் கோவிலில் தரிசனம்

இதைத் தொடா்ந்து, மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம் செங்கம் நகருக்கு வருகை தந்தது.

இதில் பங்கேற்ற அண்ணாமலை, மில்லத்நகா் பகுதியில் உள்ள தா்மராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்டாா். பின்னா், அங்கிருந்து தொடங்கிய பிரசார நடைப்பயணம், பழைய பேருந்து நிலையம் வழியாக துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. அங்கு பொதுமக்கள் மத்தியில் அவா் பேசினாா்.

இதில், பாஜக மாநில துணைத் தலைவா் நரேந்திரன், வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளா் காா்த்தியாயினி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில நிா்வாகி சங்கா், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Next Story