நீதிமன்ற மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

நீதிமன்ற  மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி
X

திருவண்ணாமலை நீதிமன்ற மாடியில் இருந்து கீழே குதித்து  தற்கொலைக்கு முயன்ற வாலிபர் பட்டுசாமி

திருவண்ணாமலையில் கோர்ட்டு மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்யாததால் பரபரப்பு

திருவண்ணாமலை தாலுகா கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). இவரின் மகன்கள் பட்டுசாமி (24), பாலச்சந்தர் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). இந்த 4 பேர் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த பரிமளா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த 4 பேரும் இன்று திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் முன்ஜாமீன் கேட்டிருந்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பட்டுசாமி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவரின் இடுப்பு, கை, கால்கள் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story