தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சாவலை அமைக்கும் பணிகள் துவக்கம்!

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சாவலை அமைக்கும் பணிகள் துவக்கம்!
X

சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ அண்ணாதுரை எம்பி

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் சாலை அமைக்கும் பணிகளை எம்பி மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, சதகுப்பம் ஊராட்சியில் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் சதாகுப்பம் - அந்தோணி யார்புரம் வரை தார் சாலை அமைக்கும் பணியினை சாலை அமைக்கும் பணியினை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தன்னை இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்ததற்காக பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை ,மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அவர்களின் படிப்பிற்காக எண்ணற்ற திட்டங்கள் , பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா நோட்டு புத்தகங்கள் மற்றும் கலைஞரின் கனவு இல்ல திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என இந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து செங்கம் சட்டமன்றத் தொகுதி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியம் தானிப்பாடி ,சின்னியம்பேட்டை, மலையனூர், செக்கடி, ஆண்டாபட்டு, ரெட்டியா பாளையம் ,மோத்தக்கல் ,இளையங்கன்னி, நாராயண குப்பம் ,வேப்பூர் ,ஆத்திப்பாடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார் .

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சத்யா வெங்கடேசன், பன்னீர்செல்வம், நகரக் கழகச் செயலாளர் அன்பழகன் ,ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார், ஏழுமலை ,கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!