108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றபோது பெண்ணுக்கு பிரசவம்

கோப்பு படம்
தண்டராம்பட்டு தாலுகா நெடுங்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் மூலம் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் கே..முனியப்பன் பணியில் இருந்தார். இராதாபுரம். அருகே செல்லும்போது சத்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. அவருக்கு மருத்துவ உதவியாளர் முனியப்பன்பிரசவம் பார்த்தார். சத்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.பின்னர் தாயும், சேயும் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை எடை குறைவாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu