கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடு கட்ட ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ

கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடு கட்ட ஆணைகளை  வழங்கிய எம்எல்ஏ
X

பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிய சரவணன் எம்எல்ஏ

கலைஞரின் கனவு இல்ல வீடு கட்ட பணி ஆணைகளை எம்எல்ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 37 ஊராட்சிகளைச் சோ்ந்த 205 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு 205 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணைய வழங்கிப் பேசினாா்.

அப்போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில், அரசு வழங்கும் வீட்டிற்கு யாராவது லஞ்சம் கேட்டாலோ அல்லது அரசாணை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்டாலோ யாரும் கொடுக்காதீர்கள் தமிழக அரசு தமிழக மக்களுக்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் குடிசை இல்லா கிராமங்களாக மாற்றுவதற்காக இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்து அதன் மூலம் அரசாணை வழங்கி மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதால் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும்,

அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு பணியின் தொகையை வழங்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அதை கண்டு நீங்க யாரும் அச்சப்படாமல் லஞ்சம் யாராவது கேட்டால் உடனடியாக என்னிடமும் ஒன்றிய குழு தலைவரிடமும் தகவல் கூறுங்கள் அப்படி கூறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உங்களுக்கு பணியின் தொகையை பெறுவதற்கு நாங்கள் முழு உதவி செய்கிறோம்,

வீடுகட்டும் பயனாளிகள் அதிகாரிகளின் ஆலோசனைப்படி திட்ட செயல்பாட்டுக்கு உள்பட்ட வீடு கட்டவேண்டும், பெரிய வீடாக கட்ட ஆசைப்பட்டு வீடு கட்டும் பணியை பணம் இல்லாமல் பாதியில் வீட்டுவிடக்கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆணையை பெற்ற அனைவரும் புதிய வீடுகட்டி அதில் குடியேர வேண்டும் என வாழ்த்தி பேசினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பவ்யா ஆறுமுகம், முனியப்பன் உள்பட ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!