செங்கத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணை வழங்கிய எம்எல்ஏ!

செங்கத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணை வழங்கிய எம்எல்ஏ!

விழாவில் பேசிய கிரி எம் எல் ஏ

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு ஆணைகளை செங்கம் எம்எல்ஏ வழங்கினார்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 ஊராட்சிகளில் உள்ள 610 பயனாளிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணையும், சிறு பழு து பார்த்தலுக் கு 5 வீடுகளும், பெரும் பழுதுபார்த்தல் வீடுகளுக்கு 162 பயனாளிகளுக்கும், சாய்தள வீடுகளில் சிறு பழுது பார்த்தல் 364 பயனாளிகளுக்கும் மற்றும் பெரும் பழுதுபார்த்தல் 145 பயனாளிகளுக்கு பணிக்கான ஆணைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசியதாவது :

கலைஞர் கனவு இல்லம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவாக இருந்தது, அடித்தட்டு மக்கள் குடிசைகளில் வாழும் மக்கள் வீடுகள் இன்றி தவித்து வந்த நிலையில் அவர்களுக்கு கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பது கலைஞரின் கனவாக இருந்தது. அவரின் கனவை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் பொழுது இந்தியாவின் முதன் முதலாக கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி கான்கிரீட் வீடுகள் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக தற்பொழுது இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களிலும் திட்டங்கள் மூலமாக கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டின் புதியதாக கலைஞரின் கனவை, அவர் ஆரம்பித்த திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில், கலைஞர் கனவு இல்லம் தற்போது தமிழ்நாடு முழுவதும் வீடு இல்லாத ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கான பணிகளை வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் கனவு இல்லம் புதியதாக ஆணை பெற்றுக் கொண்ட பயனாளிகளுக்கு நான்கு தவணைகளாக தவணைத் தொகை வழங்கப்படும்.

மேலும் கூட்டுறவு வங்கி மூலம் கலைஞர் கனவு இல்லம் ஆணை கூட்டுறவு வங்கிகளில் மூலம் உதவி பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் புதிய ஆணை பிறப்பித்துள்ளார். அதன் மூலம் வீடு கட்டுவதற்கான வசதி வாய்ப்பு குறைவாக உள்ள பயனாளிகள் அனைவரும் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆணை மற்றும் விண்ணப்பத்துடன் கடனுதவி பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிரி எம் எல் ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், ஏழுமலை ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story