செங்கத்தில் பள்ளிக்கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
பள்ளிக்கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த கிரி , எம்எல்ஏ
செங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரம் , செ.திருவள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசியதாவது :
அரசு மாணவாகளின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, மாணவ ரின் க ல் வி தடையின்றி படிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வரப்படுகிறது, காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, மாணவர்களின் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கியும் மாணவர்களின் கல்வித் தடைகளை நீக்கி, சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமர்ந்திருக்கும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை பணியாளரின் பயன்பாட்டிற்காக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.
ரத்த தானம் செய்த மாணவ மாணவிகள்
திருவண்ணாமலை மாவட்டம். செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் இயங்கிவரும் கிருஷ்ணா காலேஜ் ஆப் பார்மசி கல்லூரி மற்றும் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தியது. முகாமை செங்கம் வட்டார தலைமை மருத்துவர் சிலம்பரசன், மருத்துவர் தமிழ்செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முகாமி ல் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ரத்தம் தானமாக வழங்கினர். முன்னதாக மாணவர்களின் எடை மற்றும் இரத்தவகை சர்கரை ஆகியவை பரிசோதித்த பின்னர் அவர்களின் ரத்தம் பெறப்பட்டது. தொடர்ந்து இரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பழம், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கோபி, கல்லூரி முதல்வர் பழனிவேல், கல்லூரி நிர்வாக இயக்குனர் நாராயணன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu