மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, ஆசிரியர் கைது
X
பள்ளி மாணவிகள் 24 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

திருவண்ணாமலை அருகில் உள்ள டி.கல்லேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியராக மீனாசாந்தி மேரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை நாள்தோறும் அழைத்து அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

அது மட்டுமின்றி இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மாணவிகளை பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார்

ஆனாலும் இந்த பாலியல் தொந்தரவு கொடுத்து குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரியிடம் புகார் வழங்கினர்.

அதன் பேரில் மாணவிகளிடம் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகு இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் வழங்கிய சூழ்நிலையில், தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆசிரியர் லட்சுமணனை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அவரை பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!