கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்ப்பனந்தல் ஊராட்சியில் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் குப்பன் தலைமையில் கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி மோர், கீரனிபழம், இளநீர், பழ வகை, லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பொதுமக்களுக்கு மோர், கீரனிபழம், இளநீர், பழ வகை, லெமன் ஜூஸ் போன்றவைகளை வழங்கினர். இதில் செங்கம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.எல்.அருணாச்சலம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம் மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!