மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்
X
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தானிப்பாடி காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மொத்தக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கே.காமராஜ். இவர் மொத்தக்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் குரு என்பவருக்கும் இருந்த முன்பகை காரணமாக பணி முடிந்து திரும்பும்போது காமராஜை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடா்பாக தானிப்பாடி காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் முதல் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளா் என அனைத்து உயரதிகாரிகளிடம் புகாரளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடா்பாக காமராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில், அவரது புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளா் இளங்கோவனின் தூண்டுதல்பேரில், காமராஜ் வீடு புகுந்து சிலா் தாக்கி, அவர் மீது பொய்ப் புகாரும் கொடுத்தனா். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், காமரஜிடம் காவல்துறையினா் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி பொய் வழக்கும் பதிந்தனா்.

இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை உதவி ஆய்வாளா் இளங்கோவனிடம் வசூலித்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார். மேலும் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil