அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்
X

செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், சிறப்பு மருத்துவ முகாமினை,  செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, தொடங்கி வைத்தார்.  

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத்தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன், கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயக்குமார், கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் குப்புராஜ், கல்லூரி பேராசிரியர் முனைவர் டி வி எஸ் ஆர். சேஷாத்ரி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், பொதுமக்களுக்கு மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!