திருவண்ணாமலையில் போதை பொருட்கள் விற்பவர்களை பிடிக்க தனிப்படை
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்
Tiruvannamalai Today Live News-திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், கலந்து கொண்டு போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசுகையில்,
பள்ளிப் பருவத்தில் மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்கு வரும்போது தலைமுடிகளை சரியாக வைத்துக்கொண்டு சீருடைகளில் ஒழுக்கமாக வருவதை கடைபிடிக்கவேண்டும். கைப்பேசியில் படம் பாா்ப்பது, சக மாணவா்களை கேலி கிண்டல் செய்வது, இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மாணவர்கள் எந்த துறையில் சென்றாலும் தங்களது தனி திறமையை காட்ட வழிவகை செய்ய வேண்டுமே தவிர போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. உடன்பயிலும் மாணவர்கள் யாராவது போதை பழக்கத்திற்கு அழைத்தால் தயங்காமல் ஆசிரியர் மற்றும் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடுவடிக்கை எடுக்கப்படும். இதற்கென 12 தனிப்படை அமைத்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பவர்கள் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஜாமீன்அற்ற சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் .இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் வழிகாட்டுதலின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் செங்கம் டி.எஸ்.பி. சின்ராஜ், பள்ளித் தலைமை ஆசிரியா் காமத் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu