விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் சாலைகள்: எஸ்பி ஆய்வு

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் சாலைகள்: எஸ்பி ஆய்வு

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் சாலைகளை  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன்

செங்கத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் சாலைகளை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பதற்றமான பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகர்ம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதற்காக நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் செங்கம் முக்கிய வீதிகளான பஜார் வீதி, மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, பின்னர் அதற்காக அமைக்கப்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் பதற்றமான பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரும் பகுதிகளில் ஒன்றாக செங்கம் பகுதி இருப்பதாலும், மசூதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருடந்தோறும் வழங்கப்படுகின்ற பாதுகாப்பு போல இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், கடை வீதியில் கடந்த 6 மாதங்களாக சாலை இருபுறமும் உள்ள கால்வாய்கள் தோண்டப்பட்டு இதுவரை அது சரிசெய்யப்படாமல் உள்ளன. மேலும், மசூதி அருகில் கடைகள் கட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்ல போதிய வழியில்லாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட எஸ்.பி.பிரபாகரன், ஏ.டி.எஸ்.பி. பழநி மற்றும் போலீஸாா் விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் சாலைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின்போது காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story